F பழைய மனிதனைக் களைதல்
Our social:

24 Jan 2017

பழைய மனிதனைக் களைதல்

பழைய மனிதனைக் களைதல்

 
   பழைய மனிதனைக் களைதல்    எபேசியர் 4:22-32
அந்தப்படி முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும்
இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய
மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு (எபே 4:22)
    கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நிச்சயமான மாறுதலைக் கொண்ட வாழ்க்கை. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் பழையவைகள் ஒளிந்துபோய் புதிய வாழ்க்கையில் பிரவேசித்த ஒன்றாகும். பழைய வாழ்க்கையில் பாவத்திற்குரிய இச்சைகள் உன்னை ஆண்டு வழிநடத்தி வந்தன. ஆனால் புதிய வாழ்க்கையில் பரிசுத்தத்திற்குரிய வாஞ்சைகள் உன்னை ஆண்டு வழிநடத்த வேண்டும்.
    நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்குபாவ சரீரம்ஒழிந்துப்போகும் பொருட்டாகநம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச்சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்மரித்தவன் பாவத்திற்குநீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே (ரோமர் 6:6,7). இது வேதம் தெளிவாய் போதிக்கும் உண்மை. இது ஒவ்வொரு விசுவாசியிலும் நடந்த ஆவிக்குரிய உண்மை . அப்படியானால் இந்த புதிய மனிதனுக்கு பாவ சோதனைகள் இல்லையா? பாவசோதனைகள் உண்டு. ஆனால் பழைய மனிதன் உடனடியாக அதற்கு கீழ்படிந்து பாவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வந்தான். ஆனால் புதிய மனிதன் அப்படியல்ல. அவனில் வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியானாவர் பாவத்தை மேற்கொள்ள, அதை அழித்துப்போட பெலன் கொடுக்கிறார்.
    அவன் அறிந்திருக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையை பவுல் ரோமர் 6:11ல்சொல்லுகிறார்அப்படியே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும்நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்றுபிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். (ரோமர் 6:11). இங்கு நடக்காத ஒன்றை எண்ணிக்கொள்ளும்படியாக சொல்லப்படவில்லை. நடந்த ஆவிக்குரிய  உண்மையின்படி ஒவ்வொரு விசுவாசியும் அதின் அடிப்படையில் செயல்பட நினைவுறுத்துகிறார். ஆகையால் நீங்கள் சரீர இச்சைகளின்படிபாவத்திற்கு கீழ்படியத்தக்கதாக சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம்ஆளாதிருப்பதாக (ரோமர் 6:12).

0 comments:

Post a Comment