F மெய் விசுவாசம்
Our social:

24 Jan 2017

மெய் விசுவாசம்

மெய் விசுவாசம்

 மெய் விசுவாசம்        ரோமர் 10:1–1
“அவரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லை” (ரோமர் 10:11)

    மனிதனை நம்புகிறவன் வெட்கப்பட்டு போவான். இதில் சந்தேகமில்லை. ஆனால் தேவனை நம்புகிறவன் வெட்கப்படுவதில்லை. நீ தேவனை உண்மையாலுமே விசுவாசிக்கிறாயா என்பதுதான் கேள்வி. இன்று அநேகர் விசுவாசிக்கிறேன் என்று சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் செய்கை, பேச்சு விசுவாசத்திற்கு ஏதுவாக இருக்காது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். (ரோமர் 4 : 18-21)
    வேதம் போதிக்கும் விசுவாசம் என்பது ஏதோ ஒரு காரியத்திற்க்காக மட்டும் தேவனை நம்புவது அல்ல. உன் வாழ்க்கை முழுவதற்கும் தேவனை நம்புவதே விசுவாசம். உண்மையான விசுவாசமானது முதலாவது தன் ஆத்தும இரட்சிப்பிற்காக தேவனை நம்புவது. இயேசு தன் பாவங்களுக்காக மரித்தார் என்று விசுவாசிப்பது. தன்னை இரட்சிக்கும் தேவன் தன்னைத் தொடர்ந்து வழிநடத்துவார், வழிநடத்துகிறார் என்று முழுமையாய் உறுதிப்பூர்வமாக தேவனை சார்ந்திருப்பது. முடிவில் தேவன் தன்னை மகிமையில் சேர்த்துக்கொள்வார் என்று நிச்சயமாயிருப்பது. அவிதமான விசுவாசி ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
    இங்கு வெட்கப்படுவதில்லை என்பது முடிவைக் குறிக்கும் ஒரு பதம். அதாவது அவன் முடிவு வெற்றிகரமாக இருக்கும், முடிவு சம்பூரணமாயிருக்கும். ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவன் பல சோதனைகள், வேதனைகள் துயரங்களைக் கடந்து சென்றாலும் வெற்றியான ஒரு முடிவை சந்திப்பான்.
    மெய்யான விசுவாசமற்றவர்களின் முடிவு வெட்கத்துக்குரியதாய் இருக்கும். இவ்வுலகில் அவர்கள் பக்தியின் வேஷம் தரித்திருந்தாலும், தேவன் அவர்களைப் பார்த்து நான் உங்களை அறியேன் அக்கிரம செய்கைகாரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்லிவிடுவார். அவர்கள் வெட்கப்படுவார்கள். உன்னுடைய விசுவாசம் எவ்விதமானது என்பதை சிந்தித்துப்பார்.
மெய்யான விசுவாசிகளின் பட்டியலை எபிரேயர் 11 ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். மெய்விசுவாசிகளின் பட்டியலில் உன் பெயருண்டா? விசுவாசிகளின் பட்டியலில் பெயரில்லாத யாரும் தேவனுடைய ராஜ்யத்தில்  பிரவேசிக்கமுடியாது.

0 comments:

Post a Comment