F Tamil Christians Jesus Ministries
Our social:

Latest Post

16 Dec 2023

1(R)EANNODU BESUM

2 Jun 2017

உரையாடல் பகுதி

போதகரும் தேவனை அறியாத வாலிபரும் உரையாடுதல்.....





தேவனை அறியாத ஒரு வாலிபர் ஆலயத்திற்கு வெளியே நின்று ஆலயத்தில் நடந்து கொண்டிருந்த புனித வெள்ளி ஆராதனையை கவனித்துக் கொண்டிருக்கிறான் இதைப் பார்த்துக் கொண்டிருந்த போதகர் ஆராதனை முடிந்த பிறகு அந்த மனுஷனை சந்தித்து உரையாடுகிற ஒரு நிகழ்ச்சியைத்தான் இங்கு உரையாடல் என்கிற தலைப்பில் வெளியிடுகிறோம்..........
போதகர்:  தம்பி ரொம்ப நேரமாக ஆலயத்திற்கு வெளியே நின்று ஏதோ ஒன்றைக் கவனித்துக் கொண்ருப்பதை நான் பார்க்க முடிகிறதே
வாலிபர்:  ஐயா கடவுள் நம்பிக்கை இல்லாத நான் இந்த ஆலயத்தில் என்னதான் பேசுகிறார்கள் என்பதைப் பார்க்கும் படி நின்றேன்
போதகர்: ஏதாவது உனக்கு புரிந்த்தா?
வாலிபர்: ஐயா புனித வெள்ளி என்று சொல்லுவதையும் இயேசு உங்களுக்காக மரித்தார் என்று சொல்லுவதையும் திரும்ப திரும்ப கேட்க முடிகிறது.
போதகர்: புனித வெள்ளி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொரு ஜனத்தின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்ட நாளைத்தான் புனித வெள்ளி என்கிறோம். சுருங்கக்கூற வேண்டுமானால் ஒவ்வொருவருடைய பாவத்தையும் தாம் எடுத்து விட்டு அவர்களை தம்முடைய பிள்ளைகளாக மாற்றுவது ஆகும்.
வாலிபர்: ஐயா இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களின் தெய்வம் என்று அறிவேன் எதற்காக தெய்வம் சிலுவையில் அறையப்பட வேண்டும். இது வேடிக்கையாய் இருக்கிறதே..
போதகர்: இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் தெய்வம் அதாவது கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாரையும் படைத்தது இந்த ஜீவனுள்ள தெய்வம் தான். அதுமட்டுமல்லாமல் ஆதியில் அவர் ஒரு மனுஷனை படைத்தார். அவனுக்குத் துணையாக ஒரு மனுஷியையும் உண்டாக்கினார். இருவரையும் பிசாசானவன் பாவம் செய்யும் படி தூண்டி அவர்களை பாவியாக மாற்றினான். இதன்பின்பு இவர்களை தம்முடைய தோட்டத்தில் இருந்து தேவன் துரத்தி விட்டார். இதனால் இவர்கள் பாவிகளாக திரிந்து குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு பல சந்ததிகளாக மாறினார்கள். இதன்பின்பு இவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காகவும் பாவம் என்றால் என்ன என்பதை அறியவும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். இந்த பிரமாணத்தில் பாவம் செய்தால் இரத்தம் சிந்தப் பட வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்தார். ஆனால் ஜனங்களோ தொடர்ந்து பாவம் செய்து வந்தனர் வேதம் சொல்லுகிறது, பாவியாக இருக்கிற ஒரு மனுஷன் தேவ பிள்ளையாகவும் இருக்க முடியாது அதுமட்டுமல்லாமல் தேவன் தருகிற ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவேதான் இயேசு இரத்தம் சிந்தி தம்முடைய ஜனங்களாக மீட்க இந்த உலகத்தில் நம்மைப் போல மாமிசத்தில் வெளிப்பட்டார்.
வாலிபர்: வித்தியாசமான போதகமாய் இருக்கிறது சரி ஐயா அப்படியென்றால் இப்பொழுது நாம் எல்லாரும் தேவனுடைய பிள்ளைகளாக மாறிவிட்டோமா? என்னையும் அவர் ஏற்றுக் கொள்வாரா?
போதகர்: ஆமாம் தம்பி ஆனால் இந்த இரத்தத்திற்கு நாம் சொந்தமாக மாற வேண்டுமானால் தேவன் அதற்கு சில நிபந்தனைகளைக் கொடுத்திருக்கிறார். அதாவது நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் விசுவாசித்து நாம் செய்த பாவங்களை அறிக்கையிட்டு அவர் சொன்ன மூழ்க ஞானஸ் நானம் என்கிற சத்தியத்தை அதாவது தண்ணீரில் மூழ்கி யாரெல்லாம் எழுந்திருக்கிறார்களோ அவர்களையே தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்கிறார். தம்பி கவலைப்படாதீர்கள் உங்களையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். ஏனென்றால் இயேசு தம்மை நோக்கி வருகிறவர்களை ஒருபோதும் தள்ளுவதில்லை அவர் இரக்கமுள்ளவர்.
வாலிபர்: ஐயா முதன் முதலில் பிறருடைய பாவத்தை தன் பாவமாக ஏற்றுக் கொண்டு தம்மை வெறுக்கிறவர்களை நேசிக்கிற தெய்வமான இயேசு கிறிஸ்துவைப் பற்றி இப்பொழுது முழுமையாக அறிந்து கொண்டேன். ஆகவே இப்பொழுதே என்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு முழுமையாக என்னை இயேசுவினிடத்தில் ஒப்புக் கொடுக்கப் போகிறேன்.
போதகர்: தம்பி இப்பொழுதுதான் எனக்கு மிகுந்த சந்தோஷமாய் இருக்கிறது எதர்காகவென்றல் நீ கிறிஸ்தவனாய் மாறினதைக் குறித்து அல்ல மாறாக நீ உண்மையாக இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டாயே அதற்காகத்தான் நான் சந்தோஷப்படுகிறேன்.
குறிப்பு: எல்லா போதகர்களும் சபைக்குள்ளும் கிறிஸ்தவத்திற்குள்ளும் மட்டும் போதனை செய்யாமல் தேவனை அறியாத ஜனங்களிடத்திலும் தைரியமாக போதிப்பார்களானால் நிச்சயமாக அனேகரை சிலுவையின் நிழலில் இளைப்பாறப் பண்ணலாம்.

24 Jan 2017

கர்த்தருடைய ஆலயம்

கர்த்தருடைய ஆலயம்


  கர்த்தருடைய ஆலயம் - சங் 92 : 1 – 15
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள்
எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள்.’ (சங் 92 : 13)
   தேவனுடைய ஆலயத்தை நேசிப்பவர்கள், அதாவது ஆலயத்தில் அனைத்து காரியங்களிலும் ஆர்வமாய் பங்குபெறுகிறவர்கள் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவனுடைய ஆலயம் என்று சொல்லப்படும்பொழுது வெறும் கட்டிடத்தையல்ல, அதன் அனைத்து ஊழியங்களிலும் அக்கரையோடு ஈடுபடுவதைக்குறிக்கிறது. அநேகர் ஆலயத்திற்கு ஞாயிறு காலை சென்று வந்தால், அதுவே பெரிய காரியம் என்று எண்ணுகிறார்கள். ஆலயத்தில் நாட்டப்படுவது என்பது அதுவல்ல. ஆலயங்களில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் பங்கு பெறுவதை வாஞ்சிப்பது முக்கியம். அநேகர் ஆலயத்தில் நடைபெறும் வேத ஆராச்சிக்கூட்டங்களில், ஜெபகூடங்களில் கலந்துக்கொள்வது இல்லை, பெண்கள் ஜெப ஐக்கியங்களில் கலந்துக்கொண்டு ஜெபிக்கச் செல்வதில்லை. அதற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று வாழுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரமாட்டார்கள். ஆவிக்குரிய தேவையான போஷாக்கை அவர்கள் பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள். ஆகையால் ஆவிக்குரிய பலவீனர்களாய்க் காணப்படுகிறார்கள்.
     நீ ஆலயங்களில் ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்துக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும். அவ்விதமானவர்களே கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள். அதில் வாஞ்சையாய் பங்கு பெற்று அநேக ஆவிக்குரிய நன்மைகளை பெறுகிறவர்களாய் இருப்பார்கள். அது மாத்திரமல்ல ஆலயத்தில் செய்யவேண்டிய அநேக பணிகள் உண்டு. அதை அற்பமாய் எண்ணிவிடாதீர்கள். கர்த்தருடைய நாமத்தினால் செய்யப்படும் ஒவ்வொரு வேலையையும் கர்த்தர் கனப்படுத்துகிறார். அதன் மூலம் தேவன் அவர்களுக்கு நன்மையை வழங்காமல் விடார். நீ இவ்விதமான காரியங்களில் பங்கு பெறத் தருணங்களும் வாய்ப்புகளும் இருக்குமானால் அதை சந்தோஷத்தோடே செய். தேவன் அதை கனப்படுத்துவார். சங்கீதக்காரன் உம்முடைய பரிசுத்த  ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால்திருப்தியாவோம். (சங் 65 : 4) என்று சொல்லுகிறான்.

தேவனின் சத்தம்

தேவனின் சத்தம்


  தேவனின் சத்தம் - ஏசாயா 66 : 1 – 10
“நான் கூப்பிட்டும் மறு உத்திரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும்
அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச்
செய்து நான் விரும்பாததைத் தெரிந்துக்கொண்டதினிமித்தம்,
நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துககொண்டு,
அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்” (ஏசாயா 66 : 4)
  இந்த வசனத்தை வாசிக்கும்போது பயமாயிருக்கிறதா? அப்படியானால் அது நல்ல அறிகுறி. உங்கள் ஆத்துமாவில் நீங்கள் உணர்வுள்ளவர்களாக இருப்பதை அது குறிக்கிறது. தேவன் கூப்பிட்டபோது, நான் எப்போது மறு உத்தரவு கொடுக்கவில்லை. என்று கேட்கிறாயா? தேவனுடைய வார்த்தையை நீ ஆலயத்தில் கேட்கும்போது தேவன் உன்னைக் கூப்பிடுகிறார். தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாய் பேசுகிறார். தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தி, நம்மிடத்தில் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெரிவிக்கிறார். ஆனால்  இவ்விதமான கூப்பிடுதலை, நீ எப்படி எதிர்கொள்கிறாய் என்பது அதிக முக்கியமானது. அநேகர் அதை ஒரு வழக்கமான காரியம் என்று எண்ணுகிறார்கள். தேவாதி தேவன் என்னிடத்தில் எதிர்ப்பார்ப்பதை வெளிப்படுத்துகிறார் என்று சிறிதேனும் எண்ணுவதில்லை, அதைக்குறித்தும் சிந்திப்பதில்லை. அதை அதிக ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்வதில்லை.
   ஒருவேளை நீ அப்படி தேவனுடைய அழைப்பை அலட்சியப்படுத்துவது எந்த பாதிப்பையும் உண்டுபண்ணாது என்று எண்ணுகிறாயா? இல்லை. தேவன் இந்த வார்த்தையில் அதின் பாதிப்பை எடுத்துச் சொல்லுகிறார். அது என்ன? ஒன்று, நான் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்து கொள்ளுவேன்’, இரண்டாவது ‘திகில்களை அவர்கள் மேல் வரப்பண்ணுவேன்’. நீ இவைகளை விரும்புகிறாயா? நீ அறியவேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், உன்னுடைய காலம் எப்போதும் இப்படியே இருக்கும் என்று எண்ணாதே. தேவன் நீடிய பொறுமை உள்ளவர் என்பது உண்மை. ஆனால் அதற்கும் ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார். அவர் உன்னை நேசிப்பதின் நிமித்தம் நீ தேவன் பக்கமாகத் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தோடே தேவன் இதைச் சொல்லுகிறார். நீ தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடு. அது நல்லது.

கிருபை பெரியது

கிருபை பெரியது

                       கிருபை பெரியது - சங் 86 : 1 – 17
‘நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது,
என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்’ (சங் 86:13)
   மெய்யாலும் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும் இவ்விதமாக சொல்லாமல் இருக்கமுடியாது. ஆண்டவரே என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். இந்த இடத்தில் தாழ்ந்த பாதாளம் என்று சொல்லப்படும் போது, தேவனையறியாத வாழ்க்கையைக் குறிக்கிறது. மேலும் அது படுபாதாளமான  நரகத்தைக் குறிக்கிறது. பாவமும், பாவவாழ்க்கையும் ஒருபாதாளம் போன்றது. அதிலிருந்து மேலே எழும்பி வருவது என்பது தேவனுடைய மகத்துவமான கிருபையே ஒழிய வேறொன்றுமில்லை.
   சங்கீதக்காரன், அவனுடைய வாழ்க்கையில் தேவன்  இவ்விதமாகத் தப்பிக்கும்படி தனக்கு பாராட்டின கிருபை பெரியது என்று நினவுகூறுகிறார். கிருபை என்று சொல்லப்படும்பொழுது தகுதியற்ற ஒருவனுக்கு கிறிஸ்துவின் மூலம் தேவன் காண்பிக்கும் தயவு, இரக்கம், அன்பு, தேவன் இவ்விதமாக நம்மைத் தப்புவிக்கத்தக்கதாக நம்மிடத்தில் எந்த மேன்மையும் இல்லை. நாம் பாதாளத்திற்கே பாத்திரவான்கள். ஆனால் தேவன் தம்முடைய கிருபையால் நம்மைத் தப்புவிக்கிறார். அந்த கிருபையின் மூலம் இவ்விதமான பாதாளத்திலிருந்து மீட்பை பெற்றிருக்கிறோம். தாவீது இதை மிகுந்த நன்றியுள்ள உணர்வோடு வெளிப்படுத்துகிறார். இந்த கிருபை அற்பமானதல்ல, பெரியது, மகத்துவமானது, மேன்மையானது என்று சொல்லுகிறார்.
   உன்னுடைய வாழ்க்கையில் இவ்விதம் தேவன் அன்புகூர்ந்து காண்பித்த கிருபையைக் குறித்து மேன்மை பாராட்டுகிறாயா?தேவன் இவ்விதம் உன்னிடத்தில் காண்பித்திருக்கும் கிருபையின் மேன்மையை நீ எவ்வளவு உணருகிறாயோ, அவ்வளவாக தேவனுக்கு நன்றியுள்ளவனாய் ஜீவிப்பாய். தாவீது  இன்னுமொரு இடத்தில் இவ்விதமாக சொல்லுகிறார். ‘கர்த்தாவே நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்’ (சங் 30:3). தேவன் உன்னை கிருபையாய் இரட்சித்திராந்திருப்பாரானால், நீ இன்றைக்குப் பாவம் என்கிற பாதாளத்தில் இருப்பாய் என்பதை நினைவுகொள்.

பொறாமை

பொறாமை


      பொறாமை  - ரோமர் 13 ; 1 – 14
“பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே
நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம்” (ரோமர் 13 : 13)
   பொறாமை எவ்வளவாய் மனிதனை பல பிரச்சனகளுக்குள் நடத்துகிறது. நாம் கண்கூடாக பார்க்கிறோம். நீதிமன்றத்தில் சென்று பார்ப்பீகளானால், பொறாமையால் எவ்விதம் ஒருவர்மேல் ஒருவர் வழக்குகளைத் தொடர்கிறதையும் எத்தனை கொலைகளும் பயங்கரங்களும் நடக்கிறதைப் பார்க்கமுடியும். ஆனால் இது உலக மனிதர்களில் காணப்படும் காரியம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் பொறாமை உள்ளவனாக இருக்கமுடியுமா? இல்லை. அவன் அவ்விதமாக இருக்கக்கூடாது.
     வேதத்தில் பல இடங்களில் பொறாமை எவ்விதம் கொடுமையான காரியங்களை இழைக்கவும் துணிகிறது என்று பார்க்கிறோம். பொறாமைப் படுகிறவன், அதினால் பாதிக்கப்படாமல் இருப்பதில்லை. அதாவது நீ யார் மேல் பொறாமை கொள்ளுகிறாயோ அவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ நீ அதனால் பாதிக்கப்படுகிறாய் உன் இருதயம் அதனால் பாதிக்கப்படுகிறது. உன் இருதயம் கடினப்படுகிறது. தேவனை நீ துக்கப்படுத்துகிறாய். அது மாத்திரமல்ல தொடர்ந்து பொறாமையானது இன்னும் அதிகமான பாவத்திற்கு உன்னை வழிநடத்திச் செல்லும். பாவம் என்று தனியாய் இருப்பதில்லை. அது எப்போதும் துணையைத்தேடும். ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் காயீன் ஆபேலைப் பாருங்கள். ஆபேலின் பலியை தேவன் அங்கிகரித்து, காயீனின் பலியை தேவன் புறக்கணித்தார். தேவன் அதை நீதியாக செய்தார். ஆனால் காயீன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டான். காயீன் அதோடு நின்றுவிடவில்லை, அவன் ஒரு கொலைகாரனாக செல்லும் அளவுக்கு அவனை அது கொண்டு சென்றது.
    பொறாமையோ எலும்புருக்கி (நீதி 14:30) பொறாமை உள்ள மனிதனின் மனதிலும் ஆரோக்கியமிருக்காது,  தேவன் நமக்கு கொடுத்ததில்  சந்தோஷமுள்ளவர்களாய், தேவனையே நோக்கிப்பார்த்து சீராய் நடக்கக்கடவோம். உள்ளத்தில் நீ திருப்தியாய் இரு. அது உனக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்.

வல்லமையுள்ளவர்

வல்லமையுள்ளவர்


      வல்லமையுள்ளவர்  - எபே 3 : 12 – 21
“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும்நினைக்கிறதற்கும் மிகவும்
அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே  (எபே 3 : 20)
     தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செயல்படும் வல்லமைக்கு அளவே இல்லை. தேவன் அளவற்ற வல்லமையுள்ளவறாக இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்த சித்தமுள்ளவராயிருக்கிறார். நாம் தேவனை நோக்கி அநேக தேவைகளுக்காக, அநேகக்காரியங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்படும்படியாக ஜெபிக்கிறோம். அது நல்லது. நாம் ஜெபிக்க வேண்டும், அதிகமாய் ஜெபிக்கவேண்டும். நம்முடைய அனைத்துப் பாரங்களையும் தேவனிடத்தில் எடுத்துச்செல்லவேண்டும். அது மிக மிக அவசியமானது. அதே சமயத்தில் நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் தேவன் இவ்விதமாய் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், எண்ணுகிறோம். இதுவும் நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது, இது சாதாரணமானதல்ல, உயர்வானது.
    ஆனால், நம்முடைய ஜெபமும் எதிர்ப்பார்ப்பும், நினைவும் ஒரு எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. தேவன் இவ்விதமாக செயல்படவேண்டும் என்று நம்முடைய மனித விளங்குதலின் அளவில் எண்ணுகிறோம், ஆனால் பவுல் இதற்குமேல் தேவன் செயல்படுகிறார் என்றும் அவருடைய வல்லமை இன்னும் பெரிதான அளவில் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த சித்தமுள்ளவராயிருக்கிறார் என்றும் எழுதுகிறார். அதிகமாக மாத்திரமல்ல, மிகவும் அதிகமாய் என்று சொல்லுகிறார்.
    தேவன் இவ்விதம் செயல்பட வல்லவராயிருக்கிறார் என்பதை விசுவாசி. நம்முடைய ஜெபம் குறைவுள்ளது, நாம் எண்ணுவதும் ஒரு குறிப்பிட்ட அளவில் மாத்திரமே உள்ளது. ஆனால், தேவன் அதற்கு மேலும் மிக அதிகமாய் தம்முடைய வல்லமையை உன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியும் என்று எதிர்பார். உன்னுடைய நிலை எதுவாயிருந்தாலும் நீ அதற்கு மேல்  செயல்படும் தேவனுடைய வல்லமைக்காக எதிர்பார்த்திரு. தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவதில் வல்லவராயிருக்கிறார் என்பதை நீ காண்பாய்.

கண்ணீரைக் கண்டேன்

கண்ணீரைக் கண்டேன்

 கண்ணீரைக் கண்டேன்   2 இராஜா 20  1 – 11
உன் கண்ணீரைக் கண்டேன்” (2 இராஜா 20 : 5)
     தேவன் உன்னை மட்டுமல்ல, உன் கண்ணீரையும் நோக்குகிறார். எசேக்கியா ராஜாவின் கண்ணீரைக் கண்ட தேவன் நம் கண்ணீரையும் காண்கிறார். தேவன் நமக்குச் செய்த ஒவ்வொன்றையும் நன்றியோடு நோக்கும் போது உண்டாகும் கண்ணீரையும் காண்கின்றார். அவர் நமக்காக பாடுப்பட்ட பாடுகளை நினைக்கும் பொழுது மெய்யாலுமே நம் கண்கள் கலங்குகின்றதல்லவா?  இவ்விதமான கண்ணீரையும் தேவன் பார்க்கும்பொழுது அது அவருக்கு நிச்சயமாய்ப் பிரியமானதாய் இருக்கும்.
     ஒருவேளை உங்களுடய வாழ்க்கையில் மிகுந்த வேதனையோடு, சோதனையோடு இந்நாட்களில் கடந்துச்சென்று கொண்டிருக்கலாம்.கண்ணிராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமகவும் கொடுத்தீர்.’ (சங் 80:5)என்று சொல்லும்வண்ணமாக உங்கள் நாட்கள் இருக்கலாம். ஆனால் உங்களை, உங்கள் கண்ணீரைத் தேவன் பார்க்கிறார் என்ற நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும். அவர் கண்ணீர் யாவையும் துடைப்பார். (வெளி 7:17). கண்ணீர் என்பது சாதாரணமாக வருவதல்ல. உள்ளம் இளகும்போது, உடைபடும்போது அதன் உணர்வை வெளியாக வெளிப்படுத்துவதுதான் கண்ணீர். லாசருவின் மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்த்த வேளையில், இயேசுகண்ணீர் விட்டார் (யோவான் 11:35) என்று வேதம் சொல்லுகிறது. நமது ஆண்டவரும் இந்த பாதையில் கடந்துச் சென்றிருக்கிறார். ஆகவே கண்ணீர் விடுகிறவர்களை அதே மன உருக்கத்தோடு அவர் நோக்கிப்பார்க்கிறவராயிருக்கிறார்.
   கண்ணீரில்லாத ஊழியக்காரன் மெய்யான ஊழியகாரனாக  இருக்கமுடியாது.அள்ளிதூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்’ (சங்126:6). ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துக்கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். பவுல் கூட அதிக கண்ணீருள்ள மனிதர்தான். நான் மிகுந்தகண்ணீரோடும் கர்த்தரைச் சேவித்தேன்.’ (அப் 20:19). நீ தேவனிடத்தில் கண்ணீர் விடுவதைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படாதே. கண்ணீரோடே ஏறெடுக்கப்படும் ஜெபம் மிகவும் பலனுள்ளதாயிருக்கும்.

இரட்சிப்பு

இரட்சிப்பு


                            இரட்சிப்பு  எரேமியா 17  1 – 14
“என்னை இரட்சியும் அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்.” (எரேமியா 17 : 14)         
     இது ஒரு மனிதன் செய்யக்கூடிய பொருத்தமான ஜெபம். ’ஆண்டவரே, நீர் என்னை இரட்சித்தாலன்றி நான் இரட்சிக்கப்படமுடியாது.’ ஒரு மனிதன் தானகவே தன்னை இரட்சித்துக் கொள்ளமுடியாது என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது. ஏனென்றால் அவனுடைய ஆத்துமா ஏற்கனவே மரித்திருக்கிறது. தேவன் ஆதாமைப்ப் பார்த்து என்ன சொன்னார்? நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம். அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதி 2 : 17 ). அவ்விதமாகவே ஆத்தும மரணம் ஆதாமுக்கு மாத்திரமல்ல, மனித சந்ததி அனைத்திற்கும் ஏற்பட்டது.
    சாவு என்பது என்ன? ஆத்தும மரணம், அதாவது தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்படுவது ஆத்மீக மரணம். நித்தியமான காரியங்களைத் தேடக்கூடாதவனாய் அதை உணரக்கூடாதவனாய், உலகத்திற்கும் பாவத்திற்கும் அடிமைப்பட்டவனாய் மனிதன் போய்விட்டான். ’இப்படியாக, ஒரே பாவமும் பாவத்தினால் மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று’ (ரோமர் 5 : 12 ). ஆகவே ஆவிக்குரிய காரியங்களைத் தேடவோ நாடவோ அவன் முற்றிலும் உணர்வற்றுப்போனான். அவனாகவே தன்னுடைய இழந்துபோன நிலையை உணர்ந்து தேவனிடத்தில் வரகூடாதவனாய் போய்விட்டான். ’அந்தபடியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, உணர்வுள்ளவன் இல்லை எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.’ (ரோமர்  3 : 10 ,11 12, 23).
       ’இரட்சிப்பு கர்த்தருடையது’ என்று வேதம் சொல்லுகிறது. ஆத்துமாவில் மரித்துப்போன பாவியை தேவன் தாமே தமது ஆவியானவரைக் கொண்டு உயிர்பித்தார். இதுவே இரட்சிப்பு. ஆகவே இரட்சிப்பின் ஆரம்பம் மனிதனல்ல, தேவன் தாமே ஆரம்பிக்கிறார். ஆரம்பம் மாத்திரமல்ல முடிக்கிறவரும் அவரே. ஆகவே, நீயும் என்னை இரட்சியும் அப்பொழுது இரட்சிக்கப்படுவேன் என்று ஜெபிப்பதே சரி.