F கண்ணீரைக் கண்டேன்
Our social:

24 Jan 2017

கண்ணீரைக் கண்டேன்

கண்ணீரைக் கண்டேன்

 கண்ணீரைக் கண்டேன்   2 இராஜா 20  1 – 11
உன் கண்ணீரைக் கண்டேன்” (2 இராஜா 20 : 5)
     தேவன் உன்னை மட்டுமல்ல, உன் கண்ணீரையும் நோக்குகிறார். எசேக்கியா ராஜாவின் கண்ணீரைக் கண்ட தேவன் நம் கண்ணீரையும் காண்கிறார். தேவன் நமக்குச் செய்த ஒவ்வொன்றையும் நன்றியோடு நோக்கும் போது உண்டாகும் கண்ணீரையும் காண்கின்றார். அவர் நமக்காக பாடுப்பட்ட பாடுகளை நினைக்கும் பொழுது மெய்யாலுமே நம் கண்கள் கலங்குகின்றதல்லவா?  இவ்விதமான கண்ணீரையும் தேவன் பார்க்கும்பொழுது அது அவருக்கு நிச்சயமாய்ப் பிரியமானதாய் இருக்கும்.
     ஒருவேளை உங்களுடய வாழ்க்கையில் மிகுந்த வேதனையோடு, சோதனையோடு இந்நாட்களில் கடந்துச்சென்று கொண்டிருக்கலாம்.கண்ணிராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமகவும் கொடுத்தீர்.’ (சங் 80:5)என்று சொல்லும்வண்ணமாக உங்கள் நாட்கள் இருக்கலாம். ஆனால் உங்களை, உங்கள் கண்ணீரைத் தேவன் பார்க்கிறார் என்ற நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும். அவர் கண்ணீர் யாவையும் துடைப்பார். (வெளி 7:17). கண்ணீர் என்பது சாதாரணமாக வருவதல்ல. உள்ளம் இளகும்போது, உடைபடும்போது அதன் உணர்வை வெளியாக வெளிப்படுத்துவதுதான் கண்ணீர். லாசருவின் மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்த்த வேளையில், இயேசுகண்ணீர் விட்டார் (யோவான் 11:35) என்று வேதம் சொல்லுகிறது. நமது ஆண்டவரும் இந்த பாதையில் கடந்துச் சென்றிருக்கிறார். ஆகவே கண்ணீர் விடுகிறவர்களை அதே மன உருக்கத்தோடு அவர் நோக்கிப்பார்க்கிறவராயிருக்கிறார்.
   கண்ணீரில்லாத ஊழியக்காரன் மெய்யான ஊழியகாரனாக  இருக்கமுடியாது.அள்ளிதூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்’ (சங்126:6). ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துக்கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். பவுல் கூட அதிக கண்ணீருள்ள மனிதர்தான். நான் மிகுந்தகண்ணீரோடும் கர்த்தரைச் சேவித்தேன்.’ (அப் 20:19). நீ தேவனிடத்தில் கண்ணீர் விடுவதைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படாதே. கண்ணீரோடே ஏறெடுக்கப்படும் ஜெபம் மிகவும் பலனுள்ளதாயிருக்கும்.

0 comments:

Post a Comment