F கர்த்தருடைய கற்பனை
Our social:

24 Jan 2017

கர்த்தருடைய கற்பனை

கர்த்தருடைய கற்பனை

மார்ச்: 22     கர்த்தருடைய கற்பனை  உபா 10 :1 – 13
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடை கற்பனைகளையும் அவருடையகட்டளைகளையும் உனக்கு நன்மை உண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையேஅல்லாமல் வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். (உபாகமம் 10 : 13)
தேவனுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்வது உனக்கு நன்மையுண்டாயிருக்கும். இவைகளை நீ கர்த்தருக்கு ஏதோ பயந்து வலுக்கட்டாயமாகக் கீழ்படியும்படியாக அல்ல, மனப்பூர்வமாய் கீழ்படியவேண்டும். உன்னுடைய ஆத்துமாவிற்கு அது பிரயோஜனமானது. உலக மக்களையும் உலக வழிகளையும் பின்பற்றும்போது, அது அழிவைக் கொண்டுவரும். உன் ஆத்துமாவை அழிவுக்கேதுவாக நடத்தும். ஆனால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிவதே ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.
‘கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறப்படி நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பீர்கள் என்றும், நான் உண்டுபண்ணின எல்லாஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்சியிலும், கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்கு பரிசுத்த ஜனமாயிருப்பீர்கள் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்.
தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுகிறவர்களே, . தேவன் அதிகமான உரிமையை உங்ககளுக்குக் கொடுக்கிறார். ‘சொந்த ஜனமாயிருப்பீர்கள்.’ அதுமாத்திரமல்ல, உன்னைத் தேவன் உயர்வில் வைப்பார். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்படிவதே, மெய்யான ஆசீர்வாதத்தை நமக்குக் கொண்டுவரும். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படியாமை சாபத்தையே கொண்டுவரும்.
மேலும் தேவன் ‘இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிக்கொடுத்துவந்தால் கர்த்தர் உன்னை வாலாக்கமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்’ (உபா 28 : : 14) 

0 comments:

Post a Comment